தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணமான முக்தஹானில், 11 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோரின் லொறியை எடுத்துச் சென்று பௌத்த துறவிகளின் ஊர்வலத்தின் மீது மோதியதில் 8 துறவிகள் உயிரிழந்ததுடன் இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
சுமார் 30 துறவிகள் அடங்கிய குழு அவர்களது ஆன்மீகப் பின்பற்றுபவர்கள் அடங்கிய குழுவினர், முக்தஹானில் இருந்து உபோன் ரட்சதானி மாகாணத்தை நோக்கி 260 கி.மீ தூரப் புனித யாத்திரை நடைப்பயணத்தைத் ஆரம்பித்திருந்த நிலையில், அவர்கள் வீதியோரமாக ஒற்றை வரிசையில் நடந்து சென்று கொண்டிருந்தபோதே, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
சம்பவத்தை நேரில் பார்த்த துறவி ஃபிரா சோம்போங் “ஒரு சிறுவன் பிக்கப் லொறியை ஓட்டி வருவதைப் பார்த்ததாகவும், நான் தியான மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்த அந்த நொடியில், எதிர்பாராத விதமாக அந்த லொறி முழு வேகத்தில் எங்கள் மீது மோதியதாகவும், அதிர்ஷ்டவசமாக நானும் மற்றொரு துறவியும் உயிர் தப்பினோம் எனவும், ஆனால் எங்களுக்குப் பின்னால் இருந்தவர்கள் காற்றில் தூக்கி வீசப்பட்டதாகவும் கூறினார்.
இதன்போது சம்பவ இடத்திலேயே 5 துறவிகள் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை 20க்கும் மேற்பட்டோர் அவர்கள் முக்தஹான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சைப் பலனின்றி 3 துறவிகள் உயிரிழந்துள்ளதுடன் எஞ்சியோர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
குறித்த சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்

















