தியாக தீபம் திலீபனுக்கு சிலை வைப்பதற்கு இடம்கோரி வழங்கப்பட்ட கடிதத்தின் கோரிக்கையை மாநகர சபை அமர்வில் முன்வைப்பதாக வவுனியா மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் தியாக தீபம் திலீபனுக்கு சிலை வைப்பதற்கு இடம் கோரி மாநகர முதல்வரிடம் கடிதம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த கோரிக்கையை முன்வைத்து வவுனியா வர்த்தகர் ஒருவரால் குறித்த கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அவரால் வழங்கப்பட்டுள்ள கடிதத்தில் தமிழர்களுக்காக உன்னத இலட்சியத்திற்காக பல நாட்களாக பசியிருந்து உயிர்நீத்த தியாகி திலீபனுக்கு சிலை ஒன்றை அமைப்பதற்கு இடம் ஒன்றை ஒதுக்கித் தாருங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடிதத்தினை ஏற்றுக்கொண்ட மாநகர முதல்வர் சு. காண்டீபன்இ குறித்த சிலையினை வைப்பதற்கு இடம்கோரி வழங்கப்பட்ட கடிதத்தினை மாநகர சபை அமர்வில் முன்வைப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்தோடு கோரிக்கைக்கு அமைய வேறு சில நடைமுறைகளும் இருப்பதன் காரணமாக அதனையும் செயல்படுத்தி அந்த ஆவணங்களையும் பெற்றுத் தருமாறும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


















