-பா.பிரதீபன்-
யாழ்.பல்கலைக்கழகத்தின் கணிதவியல் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா, தனது துணைவேந்தர் பதவியில் இருந்து நேற்று விடைபெற்றுச் சென்றார்.
2020 ஒகஸ்ட் 28 ஆம் திகதி முதல் துணைவேந்தராகப் பதவி வகித்த பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜாவுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 28 திகதி வரை ஜனாதிபதியினால் இவருக்கு நியமனம் வழங்கப்பட்டிருந்தது.
இருந்த போதிலும், பல்கலைக்கழக சட்டத்தின் படி, 65 வயதை நிறைவுசெய்த பின்னர் நிர்வாகப் பதவிகளை வகிப்பதற்கு இடமளிக்காததன் காரணமாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் தானாகக் கேட்டு, அடுத்த துணைவேந்தருக்கான தெரிவை உரிய காலத்தினுள் நடாத்தியிருந்த நிலையில், இன்று புதிய துணைவேந்தரிடம் பதவியைக் கையளிக்கவிருக்கிறார்.
எனினும், பல்கலைக்கழகச் சட்ட ஏற்பாடுகளின் படி, அவர் பணியாற்றும் விஞ்ஞான பீடத்தின் நடப்புக் கல்வியாண்டு நிறைவு பெறும் – எதிர்வரும் செப்ரெம்பர் 30 வரை அவர் தனது கல்விப் பணியில் தொடர்ந்தும் கணிதவியல் பேராசிரியராகச் சேவையாற்றவுள்ளார்.


















