-த.சுபேசன்-
கடந்த சில தினங்களாக பொழிந்த கனமழை காரணமாக தென்மராட்சி பிரதேசத்தின் பல பகுதிகளிலும் நெற் பயிர்கள் நீரில் மூழ்கி அழிவை எதிர்நோக்கியுள்ளன.
விவசாயிகள் நெல் விதைப்பை மேற்கொண்டு நீண்ட காலமாக மழை இன்மையால் ஏற்கனவே ஒரு பகுதி பயிர்கள் அழிவைச் சந்தித்திருந்தன.
தற்போது தொடர் மழை மற்றும் வெள்ளம் காரணமாக குளங்கள் நிறைந்து வயல் நிலங்களில் வெள்ள நீர் தேங்கி அழிவை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















