-இ.கலைஅமுதன்-
தென்மராட்சி பிரதேச செயலகத்தை நிர்வாக வசதி கருதி இரண்டு பிரதேச செயலகங்களாக உருவாக்க யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அனுமதியளிக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டத்தின் முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், மாவட்ட செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இதன்போதே குறித்த தீர்மானத்திற்கு அனுமதியளிக்கப்பட்டது.
நீண்டகாலமாக குறித்த கோரிக்கை பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.


















