குரும்சிட்டி, தெல்லிப்பழை வைத்தியசாலை வீதியில் இன்று காலை வாள்வெட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில், இரண்டு பிள்ளைகளின் தந்தையான 32 வயதுடைய தர்மராசா தினேஷ்குமார் பலத்த வெட்டுக் காயங்களுக்குள்ளான நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆறு பேர் இந்த வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பலாலி பொலிஸார் மற்றும் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


















