பாடசாலைகளுக்கிடையிலான 14 வயதுப் பெண்களுக்கான தேசியமட்ட சமபோஷாக் கிண்ண உதைபந்தாட்ட தொடரின் இறுதியாட்டத்தில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மகளிர் அணியை வெற்றிகொண்டு தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மகளிர் அணி வரலாற்று வெற்றிபெற்றது.
பாடசாலைகளுக்கிடையிலான 14 வயதுப் பெண்களுக்கான தேசியமட்ட சமபோஷாக் கிண்ண உதைபந்தாட்ட தொடரின் இறுதியாட்டம் நேற்றைய தினம் கொழும்பு குதிரைப் பந்தைய மைதானத்தில் இடம்பெற்றது.
இறுதியாட்டத்தில் யாழ். மாவட்ட பாடசாலை அணிகளான தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மகளிர் அணியும், தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மகளிர் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

போட்டி ஆரம்பமாகி இடைவேளைக்கு முன்னர் மகாஜனா ஒரு கோலை செலுத்தி முன்னிலைபெற்றது. தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளும் விடாமுயற்சியுடன் மோதின. இடைவேளையின் பின்னர் யூனியன் பல்லூரி அணி ஒரு கோல் அடித்து போட்டியை சமனிலைப்படுத்தியது.
தொடர்ந்து பரபரப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் ஆட்ட நேரமுடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் பெறாத நிலையில் போட்டி 1-1 என சமனிலையானது.
இதனையடுத்து சமனிலை தவிர்ப்பு உதைமூலம் வெற்றி தீர்மானிக்கப்பட்டது.
சமநிலை தவிர்ப்பு எதையில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அணி கோல்காப்பாளரின் சிறப்பான தடுப்பின் மூலம் 3:2 என்ற கோல் கணக்கில் மகாஜனா மகளிர் அணியை வீழ்த்தி தேசிய சம்பியனாகி வரலாறு படைத்தது யூனியன் கல்லூரி மகளிர் அணி. இறுதிவரை போராடிய மகாஜனக் கல்லூரி மகளிர் அணி இரண்டாமிடத்தை பெற்றுகொண்டது.
தேசிய மட்டப் போட்டியில் யாழ். மாவட்டத்தை சேர்ந்த இரு அணிகள் இறுதிப் போட்டிக்குள் நுழைந்து வடக்கு மாகாணத்துக்கு பெருமைசேர்த்தன.


















