-கஜிந்தன்-
விஞ்ஞானத்தை பிரபல்யப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தேசிய விஞ்ஞான மன்று உலக விஞ்ஞான தினத்தையும், விஞ்ஞானம் தொடர்பான போட்டிகளில் தேசிய ரீதியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு வைபவத்தையும் கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் கேட்போர் கூடத்தில் நேற்றுமுன்தினம் நடாத்தியிருந்தது.
விஞ்ஞான புனைகதை எழுதுவதில் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவி ரூபிகா அருந்தவம் முதலாம் இடத்தையும், சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி கேசிகா தயாகுமாரன இரண்டாம் இடத்தையும், யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மாணவி அட்சயா ஞானச்சந்திரன் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
தேசிய விஞ்ஞான மன்றத்தின் தலைவர் கலாநிதி சுகத் சமரவீர தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிருஷாந்த அபேசேன பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார்.


















