காரைநகர் வேரப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள காரைநகர் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்குச் சொந்தமான காணியில், தொல்லியல் திணைக்கள அதிகாரிகளும் வெளிநாட்டு நிபுணர்களும் இணைந்து தொல்லியல் அகழ்வாராய்ச்சி மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ள முற்பட்ட வேளையில், அங்கு பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியில் தொல்லியல் ஆய்வுகள் என்ற பெயரில் முன்னெடுக்கப்படவிருந்த நடவடிக்கைகளுக்கு காரைநகர் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர், கௌரவ உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஆகியோர் இணைந்து கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
மக்களின் கடுமையான எதிர்ப்பு மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் தலையீட்டை அடுத்து, தொல்லியல் திணைக்களத்தினரும் வெளிநாட்டு நிபுணர்களும் தமது ஆய்வு முயற்சிகளைக் கைவிட்டு, அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.



















