-த.சுபேசன்-
சாவகச்சேரி பிரதேச சபையின் வருமானத்தை அதிகரிக்க சபை எல்லைக்குட்பட்ட கைதடிப் பகுதியில் நவீன சந்தைத்தொகுதி ஒன்றினை அமைப்பதற்கான பிரேரணையொன்றினை முன்வைத்துள்ளதாக அதன் உறுப்பினர் செல்லையா ஜெயபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில்:
கைதடியில் நவீன சந்தை தொகுதி ஒன்றினை அமைக்க வேண்டும் என்ற பிரேரணையை சாவகச்சேரி பிரதேச சபையில் சமர்ப்பித்துள்ளேன். சாவகச்சேரி பிரதேச சபையில் அதிகளவான சோலை வரியினைப் பெற்றுக்கொள்ளும் இடமாக கைதடி உப பணிமனை காணப்படுகின்றது.
இந்நிலையில் கைதடியிலுள்ள பொதுச்சந்தையில் சந்தை மற்றும் கடைகள் , பொது மலசலகூடதுடன் மேல் தளத்தில்; பொதுநோக்கு மண்டபத்துடன் ஒரு நவீன சந்தை தொகுதி அமைக்கப்பட வேண்டும்.
இந்த நவீன சந்தையாக உருவாக்குவதற்கு தேவையான சட்டரீதியான எழுத்து மூல உறுதி, ஆவணங்கள் மற்றும் நில அளவை படம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து திட்ட வரைபு ஒன்றினை தயாரித்து அதனை சபையின் அங்கீகாரத்தினைப் பெற்று நடைமுறைப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.இதன் மூலம் சபையினது வருமானத்தை அதிகரிக்க முடியும் என்பதால் பிரதேசசபை நடவடிக்கை எடுப்பது அவசியமெனவும் அவர் தெரிவித்தார்.


















