-சி.ஜெகதீஸ்வரன், அன்ரனிதிலக்-
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் வடக்கு பகுதியில் நேற்று திங்கட்கிழமை கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்:-
நெல்லியடி விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று காலை நாகர்கோவில் வடக்கு பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது 1கிலோ 750 கிராம் கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கேரள கஞ்சாவுடன் மருதங்கேணி பொலிசாரிடம் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்தனர்.
பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட குறித்த இளைஞர் விசாரணை முடிந்த பின்னர் சான்றுப் பொருளுடன் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என்று மருதங்கேணிப் பொலிஸார் தெரிவித்தனர்.


















