உலகப் புகழ் பெற்ற நாதஸ்வர வித்துவான் பி. எஸ். பாலமுருகனுக்கு அமெரிக்க அரசின் இரண்டு உயரிய விருதுகள் கிடைத்துள்ளன. நியூயோர்க் மாநில செனட்டரான ஜெரமி கூனி மற்றும் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர், ஜோ மொரெல்லே ஆகியோரிடமிருந்து இவ்விருதுகள் இவருக்கு கிடைத்துள்ளன.
அமெரிக்காவின் பல பாகங்களிலும் தற்போது யாழ்ப்பாணத்தை சேர்ந்த பி. எஸ். பாலமுருகனின் திறமைகள் பாராட்டிப் பேசப்படுகின்றன. தமிழர்களின் இசை மரபுக்கு உலகப் புகழ் பெற்ற நாதஸ்வர வித்துவான் பி. எஸ். பாலமுருகன்,சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுத் தந்துள்ளதாகவே இவ்விருதுகள் நோக்கப்படுகின்றன. ஒரு கலைஞனின் வாழ்நாள் அர்ப்பணிப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக இதை நோக்க முடிகிறது.
யாழ்ப்பாண மண்ணில் பிறந்த இந்த நாதம், இன்று ரொச்செஸ்டர் நகரின் இதயத்திலிருந்து அமெரிக்க அரசின் நெஞ்சைத் தொட்டிருக்கிறது . இதுவே இந்த பெருமையின் தூய யதார்த்தம். எல்லை கடந்த உழைப்பும், பண்பாட்டை தாங்கும் தியாகமும் இன்று உலகமெங்கும் பாராட்டைப் பெற்றிருக்கிறது.


















