-ஞா.செந்தமிழ்ச்செல்வன்-
நீர்வேலி றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையின் பரிசளிப்பு விழா இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் அதிபர் சு.சுயதீப் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.றஜீவன் பிரதமவிருந்தினராகவும், யாழ்ப்பாண கல்வி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் சி.மதியழகன் சிறப்பு விருந்தினராகவும், ஓய்வுபெற்ற அதிபர் சி.தர்மரத்தினம் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.


















