-க.சபேஷன், பா.பிரதீபன்-
நெடுந்தீவுக்கு பயணிகளை ஏற்றி சென்ற ‘நெடுந்தாரகை’ படகில் கடற்படையினர் பியர் ரின்களையும் ஏற்றி சென்றமை தொடர்பில் பயணிகள் விசனம் தெரிவித்தனர்.
குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி நேற்று திங்கட்கிழமை மாலை பயணித்த ‘நெடுந்தாரகை’ படகில் கடற்படையினர் பெருமளவான பியர் ரின்களை ஏற்றி நெடுந்தீவுக்கு எடுத்து சென்றனர்.
படகில் பெண்கள், சிறுவர்கள் என பெருமளவானவர்கள் பயணித்த நிலையில் அதில் சென்ற கடற்படையினர் பெருமளவான பியர் ரின்களை வெளிப்படையாகவே படகில் ஏற்றி நெடுந்தீவிற்குக் கொண்டு சென்றனர்.


















