-பா.பிரதீபன்-
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த சுமார் இந்திய மீனவர்கள் 7 பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டனர்.
நேற்றுமுன்தினம் இரவு கடற்படையினர் மேற்கொண்டிருந்த ரோந்து நடவடிக்கையின்போது மேற்படி இந்திய மீனவர்கள் 7 பேரையும், அவர்கள் பயணித்த படகையும் கடற்படை சிறைப்பிடித்தது.
குறித்த மீனவர்கள் மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், திணைக்களம் குறித்த 7 மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட பொருட்களையும் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவர்களை பெப்ரவரி 3ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.


















