பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமும் வேண்டாம் புதிதாகக் கொண்டு வரப்படுகின்ற அரசைப் பாதுகாக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டமும் வேண்டாம் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் கண்டனத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வலி. கிழக்குப் பிரதேச சபையின் நேற்றை மாதாந்த அமர்வில் தவிசாளர் தியாகராஜா நிரோஸினால் முன்வைக்கப்பட்ட குறித்த கண்டன பிரேரணை வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட போது தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இருவர் சபையில் இருந்து வெளியேறியதுடன் சபையில் பிரசன்னமாகியிருந்த ஏனைய தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.இந் நிலையில் 25 வாக்குகளால் பிரேரனை நிறைவேறியது.


















