-க.சபேஷன், பா.பிரதீபன்-
பழைய மற்றும் புதிய பயங்கரவாத தடைச்சட்டங்கள் வேண்டாம் எனக்கோரி யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினால் நேற்று காலை கையெழுத்து போராட்டம் நடத்தப்பட்டது.
நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடர்ந்து 22ம் திகதிவரை நடைபெறவுள்ளது. புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கோரியும், நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கோரியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பல்கலைக்கழக ஊழியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் மாணவர் ஒன்றியம், ஆகியன இணைந்து இந்தப் போராட்டத்தை மேற்கொண்டனர்.


















