-கனடா- இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு-
-கஜிந்தன்-
கனடா – இலங்கை ஆகிய நாடுகளின் கூட்டு வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பல்துறைசார் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் விருது வழங்கும் நிகழ்வு இவ்வருடமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறித்த சம்மேளனத்தின் விருது வழங்கும் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
மே மாதம் 22 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
வர்த்தகம், விவசாயம், கடற்றொழில், சுற்றுலா உள்ளிட்ட பல்துறைசார் வர்த்தக பொருளாதார துறையில் இருக்கும் முயற்சியாளர்களை இனங்கண்டு குறித்த விருது வழங்கப்பட்டு வருகின்றது.
குறிப்பாக பெண்களின் திறமைகள,; அவர்களது முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்க வழி செய்கின்றோம்.
உற்பத்தியாளர்கள், சுற்றுலா துறைசார் முயற்சியாளர்களும் இதில் முக்கிய இடம் பெறுவர்.
சிறிய, நடுத்தர வர்த்தக மற்றும் முயற்சியாளர்கள் இதில் கலந்து கொண்டு தமது முயற்சிகளை உலகுக்கு கொண்டுசெல்ல முடியும்.
விண்ணப்பிக்க விரும்புவோர் தமது முயற்சிகளை அடையாளப்படுத்தி விண்ணப்பங்களை இம்மாதம் 20 ஆம் திகதி முதல் ஆளுநர், மாவட்ட செயலர், பிரதேச செயலர் ஊடாக முழுமையான உறுதிப்படுத்தலுடன் எமக்கு அனுப்பி வைக்க முடியும். மார்ச் 31 ஆம் திகதி விண்ணப்பங்களை அனுப்பி வைக்கும் இறுதி தினமாகும்.
இதில் அனைத்து தர நிலையிலும் இருக்கும் முயற்சியாளகர்களும் இணைந்து கொள்ள முடியும்.
2025 ஆம் ஆண்டு 20 முயற்சியாளர்கள் விருதுகளை பெற்றிருந்த நிலையில் இவ்வாண்டு அது 25 முதல் 30 வரையானோர ;விருது பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.


















