-சி.ஜெகதீஸ்வரன்-
பால் வியாபாரத்துக்குச் சென்ற பெண் தலைமைத்துவ குடும்பப் பெண் ஒருவர் வான் மோதியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கோப்பாய் வடக்கு, கோப்பாயைச் சேர்ந்த தர்மலோகேஸ்வரன் சங்கீதா (வயது -43) என்ற பெண்ணாவார்.
கணவன் இறந்த நிலையில் ஒரு பிள்ளையுடன் வசித்து வந்த மேற்படி பெண் பால் வியாபாரம் செய்து வந்தார்.
கடந்த திங்கட்கிழமை காலை 6 மணியளவில் பால் வியாபாரத்துக்கு சென்றபோது, கோப்பாய் வைத்தியசாலை அருகாமையில் துவிச்சக்கர வண்டியை வீதியின் வலது பக்கமாக திருப்பிய போது பின்னால் வந்த வான் மோதியதில் மயக்கம் அடைந்தார். உடனடியாக கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த புதன்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இம்மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை கோப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர்.


















