-சமூக விஞ்ஞான ஆய்வு மையம்-
-கஜிந்தன்-
பிராஜா சக்தி எனும் திட்டம் தமிழ் தேசிய அரசியலை வேரிலேயே அழிக்க கூடிய ஆபத்தானது என அரசியல் ஆய்வாளரும், சட்டதரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குனருமான சி. அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பில் நேற்று அவர் நடாத்திய ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியாளர்கள் அடிமட்ட மக்கள் மத்தியில் பணியாற்றுவதற்காக பிரஷா சக்தி என்கின்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர்.இவர்கள் இந்த அமைப்பின் ஊடாக வறுமை ஒழிப்புத் திட்டத்தை தாம் மேற்கொள்வதாக கூறி வருகின்றனர்.
ஏனினும் தங்களினுடைய உள்ளூராட்சி அதிகாரங்கள் இல்லாத இடங்களில் அதனை பலவீனப்படுத்துவதற்கா அந்த அதிகாரத்திற்கு சமாந்தரமாக உருவாக்கப்பட்ட அமைப்பே இந்த பிராஜா சக்தியாகும்.
இது தொடர்பில் தமிழ் தேசிய சக்திகள் இதன்னுடைய அபாயத்தை சரியாக விளங்கிகொள்ள வேண்டும். தமிழ் தேசிய சக்திகளை பொறுத்தவரை அவர்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு அரசியலை செய்து கொண்டிருக்கிறார்களே தவிர தேச நிர்மான அரசியலில் கவனம் செலுத்தவில்லை.
எமது மக்களில் உதவிகளையும் தேவைகளையும் எதிர்பார்ப்பவர்கள் உள்ளனர். ஆகவே அந்த நலன்களை பேணவேண்டிய பொறுப்பு தமிழ் தேசிய சக்திகளுக்கு இருக்கின்றது. தமிழ் தேசிய சக்திகள் அதில் கவனம் செலுத்தமையால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற ஒரு நிலைமையை நாங்கள் பார்க்கின்றோம். அகவே இது ஒரு அபாயமான விடயம்.
இது தமிழ் தேசிய அரசியலை வேரிலேயே அழுக செய்கின்ற ஒரு விடயம் என்றார்.


















