பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அபிவிருத்திக்கானது. அரசியல் இங்கு இல்லை என உடுவில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் பவானந்தராஜா தெரிவித்தார்.
உடுவில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் ஆரம்பமான போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது கூட்டத்திற்கு வருகை தந்த உடுவில் பிரதேச சபையின் தவிசாளர் பிரகாஷ் தெற்கில் இடம்பெறும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் அந்தப் பகுதியின் தவிசாளருக்கு மேல் இருக்கையில் ஆசனம் வழங்கப்படுகிறது.
இலங்கையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் சட்டம் தெற்கிற்கு ஒன்று, வடக்கிற்கு ஒன்றாக இருக்க முடியாது எனக்கு உரிய ஆசனம் வேண்டும் என்றார்.

இதன்போது பதில் வழங்கிய அபிவிருத்திக் குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பவானந்தராஜா இங்கு எந்த அரசியலும் இல்லை அபிவிருத்தி தான். உங்கள் கோரிக்கையை ஏற்கிறேன் வாருங்கள் என்றார்.
இதன் போது கீழ் வரிசையில் அமர்ந்திருந்த தவிசாளர் எழுந்து சென்று அபிவிருத்திக் குழுத் தலைவருக்கு கைகொடுத்து மேல் இருக்கையில் அமர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
















