-நாடாளுமன்றில் அர்ச்சுனா ஆவேசம்-
விடுதலைப் புலிகள் போதைப் பொருள் விற்றார்கள் என ‘323 கொள்கலன் கள்ளன்’ கூறுகிறார். இனிமேல் எப்படி உங்களை சிங்கள பிரபாகரன் என்று சொல்லிக் கொண்டு வடக்கில் வாக்கு கேட்பீர்கள்? என நாடாளுமன்ற உறுப்பினர் இ.அர்ச்சுனா கேள்வி எழுப்பியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 323 கொள்கலன் கள்ளன் என்று கூறப்படுபவர் இன்று இந்த பாராளுமன்றத் தில் தேசியத் தலைவரும் 44 போராளிகளும் போதைப் பொருள் விற்றதாக கூறியுள்ளார்.
நாங்கள் சிங்கள பிரபாகரன் என்று கூறிக்கொண்டே இவர்கள் வந்தனர். இவ்வாறு வந்தவர்களே அநுர குமார அரசாங்கம். இவர்கள் கூறியதை எமது சமூகம் நம்பியது. இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்க த்திற்கு வாக்களித்தது எமது சமூகம் செய்த வரலாற்று தவறு.
எமது தேசிய தலைவர் வடக்கு, கிழக்கை ஆண்டபோது ஒது படகும் வரமுடியாது. அதனை கடலில் அழிப்பார்கள். இவ்வாறான நிலைமையில் அவர்களை போதைப் பொருள் விற்றவர்கள் என்று கூறும் போது அதனை எண்ணி நான் கவலையடைகின்றேன்.
உயிரை துச்சமாக மதித்து ஆயுதம் ஏந்தி போராடியவர்கள். நீங்களும் போராடிய சமூகமே. நீங்களும் ஆயுதம் தூக்கியவர்களே. இன்று இவ்வாறு கூறும் போது உங்களுக்கு வெட்கமில்லையா? நீங்கள் சோறா சாப்பிடுகின்றீர்கள். நீங்கள் எந்த முகத்துடன் யாழ்ப்பாணம் வரப்போகின்றீர்கள்.
நீங்கள் கூறிய விடயம் உங்கள் தலைவர் ரோகண விஜேவீரவுக்கே அவமானம். நீங்கள் எங்களை அடிக்கும்போதே நாங்கள் ஆயுதம் ஏந்தி போராடினோம். வடமாகாணத்தில் இருப்பவர்கள் இனவாதி என்று கூறியுள்ளீர்கள். நீங்கள் வலது கையாலா சாப்பிடுகின்றீர்கள். இடது கையால் சாப்பிடுங்கள் என்றார்.


















