-ஊர்காவற்றுறையில் நேற்று நடந்தது-
-க.சபேஷன், கஜிந்தன்-
அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான அ.அருள்பாயஸ் என்ற சிறுவனின் கொலைக்கு நீதி வேண்டி நேற்று செவ்வாய்க்கிழமை ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மனித உரிமை ஆர்வலர் அமைபினரால் முனெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில் சிறுவனின் உறவுகள் மற்றும் ஏனையோர் கலந்துகொண்டு பொலிசாருக்கு எதிரான எழுதப்பட்ட கோசங்கள் தாங்கிய பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டம் ஊர்காவற்றுறை நீதிமன்றின் முன்பாக காலை 11 மணக்கு ஆரம்பமானது. போராட்டம் ஆரம்பமான சில நிமிடங்களில் நீதிமன்ற பொலிசாரால் நீதுமன்றுக்கு முன்பாக போராட்டம் நடத்த முடியாது எனக் கூறி நீதிமன்ற வளாகத்தை கடந்து போராட்டத்தை முன்னெடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது.
பொலிசாரின் கோரிக்கையை ஏற்ற போராட்டக்காரர்கள் பின்பு ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையம் முன்பாக ஒன்றுகூடி போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது பொலிசாரின் செயலைக் கண்டித்து பல கோசங்கள் எழுப்பப்பட்டன. மேலும் உயிரிழந்த சிறுவனுடைய உறவினர்கள் தமக்கான நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று கண்ணீருடன் வலியுறுத்தியிருந்தனர்.
முன்பதாக கடந்த 10 ஆம் திகதி அதிகாலை 1.15 மணியளவில் வேலணை – அல்லைபிட்டிப் பகுதியில் உத்தரவை மீறி கடமையில் இருந்த பொலிசாருடைய கட்டளையை மீறி தபிச்செல்ல முற்றட்ட ஹயஸ் ரக வாகனம் மீதே தாம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதன் போதே குறித்த 17 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


















