அரச பகுப்பாய்வாளரின் அறிக்கைகள் தொடர்பில் புதிய சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் உத்தரவுக்கு இணங்க, விஷப் பொருட்கள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் புதிய சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
இச்சட்டமூலத்தின் ஊடாக, ஹெரோயின், கொக்கேய்ன் போன்றவற்றுடன் ‘மெத்தம்பெட்டமைன்’ (Methamphetamine) என்ற சொல்லும் இணைக்கப்பட்டுள்ளது.
அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகள், போதைப்பொருள் குற்றவாளிகளுக்கான தண்டனைகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய கைது நடைமுறைகள் தொடர்பிலும் புதிய திருத்தங்கள் மற்றும் யோசனைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், போதைப்பொருள் குற்றவாளிகளுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களைக் கைது செய்யும் போது புலனாய்வுப் பிரிவினர் கட்டாயம் பின்பற்ற வேண்டிய முறைகளும் இதில் வகுக்கப்பட்டுள்ளன.


















