-ஆராய சி.ஐ.டி.யினருக்கு ஜனாதிபதி பணிப்பு-
-இ.கலைஅமுதன்-
யாழ்ப்பாணத்தில் பௌர்ணமி நாளில் ஆர்ப்பாட்டம் செய்யும் நபர்கள் யாருக்காவது அந்த இடத்தில் காணியுள்ளதா எனத் தேடிப் பாருங்கள் என்று நான் புலனாய்வுத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
எந்தவொரு இடத்திலும் இனவாத செயற்பாட்டிற்கோ, மீண்டும் இனவாதம் தலை தூக்கவோ நாங்கள் இடமளிக்கமாட்டோம். ஆனால் ஒரு சில இடங்களிலே இனவாத சம்பவங்கள் நடக்கின்றன. ஒரு புனித ஸ்தலத்தை அடிப்படையாகக் கொண்டு முறுகல் நிலை நடைபெறுகிறது.
பௌர்ணமி அன்று ஸ்ரீ மகாபோதியை கடந்து சிங்களவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகிறார்கள். அந்த இடத்தில் கூட பகை வைராக்கியம் தான் காணப்படுகிறது.
ஆகவே, சில நேரங்களில் தென்பகுதியிலே இருக்கும் விகாரைகளை கடந்து சில பௌத்தர்கள் இங்கு வணக்கம் செய்வதற்கு வருகிறார்கள்.
பௌர்ணமி தினத்தில் இங்கிருக்கும் விகாரைகளில் காணிக்காக அல்ல இனவாத அடிப்படையில் ஒன்று கூடுகிறார்கள்.
ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் ஆர்ப்பாட்டம் செய்யும் நபர்கள் யாருக்காவது அந்த இடத்தில் காணியுள்ளதா எனத் தேடிப் பாருங்கள் என்று நான் புலனாய்வுத்துறை அதிகாரிகளிடம் கேட்டேன்.
ஆகவே, அதிகாரத்தை இல்லாமல் செய்யும் இனவாத சக்திகள் சில சில இடங்களிலே இனவாத சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறார்கள்.
எந்த ஒரு இனவாத செயலும் மீண்டும் தலை தூக்க இடம் அளிக்க மாட்டோம் என்றார்.


















