-சி.ஜெகதீஸ்வரன்-
சுகாதார மேம்பாட்டை நோக்கிய பயணத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் செல்லத்துரை பிரசாத் எழுதிய மாரடைப்பு நோய் எனும் பொதுமக்களுக்கான ஒரு வழிகாட்டி நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை சூரிய மஹால் திருமண மண்டபத்தில் பொது வைத்திய நிபுணர் வைத்தியர் க .சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வாழ்த்துரையை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரயின் ஓய்வு பெற்ற பௌதிகவியல் ஆசிரியர் எஸ். சோதிலிங்கம் வழங்கினார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பொது வைத்திய நிபுணர் வைத்தியர் சி. சிவன்சுதன் நூல் வெளியீட்டுரையை நிகழ்த்தினார்.
நூலின் முதற்பிரதியை பௌதிகவியல் ஆசான் இ. குமரன் பெற்றுக் கொண்டார்.
நூலின் மதிப்பீட்டுரையை யாழ்ப்பாணம் அரசினர் தாதிய பயிற்சிக் கல்லூரி அதிபர் சி. ஜெயக்குமார் நிகழ்த்தினார்.
ஏற்புரையை நூலாசிரியர் நிகழ்த்தினார். இந் நிகழ்வில் பருத்தித்துறை நகரசபை தவிசாளர் வின்ச் டிபோல் டக்ளஸ்போல், வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


















