-செ.கபிலன்-
கடைசி காலத்தில் பிள்ளைகள் கவனிக்காததால் தந்தை ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாவட்டபுரம் பகுதியில் நேற்று காலை இடம்பெற்றது.
காங்கேசந்துறையில் இருந்து காலை 6 மணியளவில் ஓமந்தை நோக்கி பயணித்த யாழ்ராணி புகையிரத்தில் 84 வயதுடைய முதியவரே மோதுண்டு உயிரிழந்தார்.
முதியவர் மன விரக்தியில் கடிதத்தை எழுதி வைத்துவிட்டு ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காங்கேசந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இறப்பு விசாரணைகளை மல்லாகம் நீதிமன்ற திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடல் கூற்று பரிசோதனையின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


















