பூநகரி – செம்மன்குண்டு பகுதியில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி அதே பகுதியை சேர்ந்த, 37 வயதான நபரே உயிரிழந்துள்ளார். மின்சாரம் தாக்கிய நிலையில் உடனடியாக பூநகரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக பூநகரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


















