லியனல் மெஸ்ஸியின் ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி இரண்டாவது முறையாக ஸ்பெய்ன் சம்பியனானது.
ஐக்கிய அமெரிக்காவில் தற்போது முடிவுக்கு வந்த இறுதிப் போட்டியின் மேலதிக நேரத்தின் இரண்டாவது பாதியின் முதலாவது நிமிடத்தில் பெரான் டொரஸ் பெற்ற கோலின் மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று ஸ்பெய்ன் சம்பியனானது.
போட்டியின் இறுதிக் கணம் வரையில் அதிர்ச்சிகரமாக எந்தவொரு உதையையும் ஆர்ஜென்டீனா கொண்டிருக்கவில்லையென்ற நிலையில், ஆர்ஜென்டீனாவை ஸ்பெய்ன் ஆக்கிரமித்திருந்தது.

















