-கஜிந்தன்-
யாழ்.சுன்னாகம் பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளான நிலையில் டிப்பர் வாகன சாரதி கைது செய்யப்பட்டார்.
டிப்பரில் கொண்டு செல்லப்பட்ட மணல் சட்டவிரோதமாக ஏற்றப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறினர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















