அரச வங்கிகளில் நிலவும் பிரச்சினைகளுக்கு எதிராக, தீப்பந்தப் போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள இலங்கை வங்கி வடபிராந்திய காரியாலத்துக்கு முன்பாக இரவு 7 மணியளவில் இடம்பெற்றது.

அரச வங்கிகளின் சட்டத் திருத்தங்களினூடாக, வங்கி தனியார் மயப்படுத்தலை நோக்கிச் செல்லவுள்ளதாக போராட்டக்காரர்கள் இதன்போது குற்றஞ்சாட்டியுள்ளனர்.

















