-செ.ரவிசாந்-
நல்லூர் பிரதேச செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் 3 மணி வரை இடம்பெறவுள்ள நடமாடும் சேவையின் ஒரு அங்கமாக நடமாடும் இரத்ததான முகாமும் இடம்பெறவுள்ளது.
ஒருவர் தானமாக வழங்கும் குருதி குறைந்தது மூன்று உயிர்களின் உயிரை காப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. எனவே, குருதிக் கொடையாளர்கள், ஆர்வலர்களை உரிய நேரத்தில் தவறாது வருகை தந்து பங்களிப்பு வழங்குமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.


















