-கஜிந்தன்-
யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய மனித உரிமை நிலைமைகள் குறித்து யாழ்.பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவினரிடம் கேட்டறிந்தார். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே ஃபிரான்சே.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தினருக்குமிடையே நேற்றைய தினம் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போதே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜிடம் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே ஃபிரான்சே. யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய மனித உரிமை நிலைமைகள் குறித்து கேட்டறிந்தார். இக்கலந்துரையாடலில் மனித உரிமைகள் உத்தியோகத்தர் சேவியர் குமுதினியும் கலந்துகொண்டார்.


















