-இ.கலைஅமுதன்-
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு உலக கிண்ணம் கொண்டு வரப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டது.
இருபதுக்கு இருபது கிரிக்கெட் உலகக் கிண்ண போட்டியை இந்தியா – இலங்கை இணைந்து நடத்தும் நிலையில் ரி-20 உலக கிண்ணம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
இந்நிலையில் ரி-20 உலக கிண்ணம் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் காட்சியாக கொண்டு செல்லபடம் நிலையில் நேற்று மாலை யாழ்ப்பாண மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு யாழ்ப்பாணத்தின் அடையாளமிக்க பகுதிகளில் உலகக் கிண்ணம் வைக்கப்பட்டு புகைப்படம் எடுக்கப்பட்டன.
யாழ். மாவட்ட செயலகத்தில் இருந்து திறந்த வெளி வாகனத்தில் பல்வேறு பகுதிகளுக்கு உலகக் கிண்ணம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
உலகக் கிண்ண பாதுகாப்புக்காக பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
மேலும் யாழ்ப்பாணம் பொதுசன நூலகம், யாழ்ப்பாணம் கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கும் உலகக் கிண்ணம் கொண்டு செல்லப்பட்டது. உலகக் கிண்ணத்துடன் புகைப்படம் எடுக்க பலரும் முண்டியடித்தமை குறிப்பிடத்தக்கது.


















