-பொங்கல் நாளில் உறுதியளிக்கிறேன் – ஜனாதிபதி அநுர-
-சகல இன மக்களும் கௌரவமாக வாழும் நாடு உருவாகும்-
-இனவாதம், இனவாதிகள் தோற்ற ஆண்டாக இந்த ஆண்டு மாறும்-
-சொ.வர்ணன்-
யாழ்ப்பாண மக்களின் எதிர்பார்ப்பையும், எமக்கு வழங்கிய நம்பிக்கையையும் ஒருபோதும் வீணடிக்க மாட்டோம் என்ற உத்தரவாதத்தை பொங்கல் நாளில் மக்களுக்கு வழங்குகிறேன் என கூறியுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க,
சகல இன மக்களும் கௌரவத்துடன் வாழக்கூடிய ஒரு நாட்டை நிச்சயமாக உருவாக்குவோம், இனவாதத்தை தூண்டும் இயக்கங்கள் தோல்வியடைந்த, தேசிய ஒருமைப்பாட்டுக்காக போராடும் ஒரு ஆண்டாக இந்த ஆண்டு அமையும் எனவும் கூறியுள்ளார்.
வேலணை – ஐயனார் ஆலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தேசிய பொங்கல் விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது ஜனாதிபதி மேலும் கூறுகையில்,
யாழ்ப்பாண மக்கள் எமக்கு அளித்த நம்பிக்கை ஒருபோதும் நான் மறக்கமாட்டேன். அதேபோல் யாழ்ப்பாண மக்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்பையும் ஒருபோதும் சிதறடிக்க மாட்டேன். ஏன்ற உத்தரவாதத்தை பொங்கல் நாளில் மக்களுக்கு வழங்குகிறேன்.
ஆட்சி மாற்றம் ஒன்றை நாட்டு மக்கள் விரும்பினார்கள் அதற்கு தமிழ் மக்களும் எம்மோடு கைகோர்த்தார்கள். ஆந்த ஆட்சியே இன்று உள்ளது. கடந்த கால அரசாங்கங்களில் மக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தினால் அவர்களை புறந்தள்ளிவிட்டு,
அந்த அதிகாரத்தை எம்மிடம் கையளித்தார்கள். அதனை நாம் பொறுப்பேற்று நடத்திக் கொண்டிருக்கிறோம். எங்களது பயணத்தை பல்வேறு சவால்கள் மற்றும் இடையூறுகளின் மத்தியில் மக்களுக்கு வழங்கிய ஆணையை நிறைவேற்றுவதற்காக பயணிக்கிறோம்.
இந்த நாட்டில் வாழும் சகல இன மக்களையும் பிரதிபலிப்பதாக எமது அரசாங்கம் செயற்படுகிறது. அதை பொறுக்க முடியாதவர்கள் பொய்களை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மக்கள் விசேடமாக யாழ்ப்பாண தமிழ் மக்கள் எமது பயணத்திற்கு உறுதுணை புரிந்தவர்கள்.
அவர்களின் எதிர்பார்ப்பை சிதறிடிக்காமல் நிறைவேற்றுவோம். நிங்கள் எம்மோடு நிலைத்திருங்கள். யாழ்ப்பாண மக்களின் எம் மீதான நம்பிக்கை வீழ்ச்சியடைய ஒருபோதும் அனுமதிக்க மட்டேன். ஆனைவரும் கௌரமாக வாழக்கூடிய நாடு உருவாகும்.
எமது பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலம் உருவாகும். ஊங்களிடமும் அந்த எதிர்பார்ப்பு நிறைந்திருப்பதை நானறிவேன். இருப்பதை விடவும் சிறப்பான வாழ்க்கை அமையும் என்றார்.


















