-க.சபேஷன்-
யாழ்.நகரை அண்டிய பகுதிகளில் பொலிஸார் நடத்திய தேடுதலில் போதைப் பொருட்களுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 580 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளும் 400 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


















