யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நாளை வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு தினங்கள் வேந்தர் தலைமையில் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

தினமும் மூன்று அமர்வுகளாக 12 அமர்வுகள் இடம்பெறவுள்ளன. முதலாவது அமர்வு காலை 9 மணிக்கும். இரண்டாவது அமர்வு முற்பகல் 11.30 மணிக்கும், மூன்றாவது அமர்வு பிற்பகல் 2.30 மணிக்கும் இடம்பெறும்.


















