-ஞானத்தமிழ்-
யாழ்.பல்கலைக்கழக தமிழியற் கழகத்தின் ஏற்பாட்டில் முல்லை முகுந்தினியின் இரு நூல் வெளியீட்டு விழா இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு யாழ். பல்கலைகழக கலைப்பீட கருத்தரங்க மண்டபத்தில் தலைவர் யோ.நிவேதன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இங்கு ‘புயலடித்த தேசம்’ மற்றும் ‘முள்ளிவாய்க்காலும் முட்கம்பி வேலியும் ‘ ஆகிய இரு நூல்கள் வெளியிடப்படவுள்ளன.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலை கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராசா பிரதம விருந்தினராகவும் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட பதில் பீடாதிபதி கலாநிதி கி.சண்முகநாதன், கலைப்பீடத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கி.விசாகரூபன் மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர் சி.சிவன்சுதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்.


















