யாழ்ப்பாணத்தில் நீரிழிவு தாக்கம் அதிகரித்து செல்வதாக யாழ். போதனா வைத்தியசாலையின் நீரிழிவு நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் மகாலிங்கம் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறிப்பாக இளம் யுவதிகள், இளைஞர்கள் மத்தியில் நீரிழிவு தாக்கம் அதிகரித்து செல்வது காணக்கூடியவாறு உள்ளது.
கொழும்பு மாவட்டத்திற்கு அடுத்ததாக, யாழ். மாவட்டம் நீரழிவு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது. இது அபாய அறிகுறியாகும். இத்தருணத்தில் இளைய தலைமுறையை காப்பாற்ற வேண்டிய கடப்பாடு இருக்கின்றது.
யாழ். போதனா வைத்தியசாலை நீரழிவு சிகிச்சை நிலையமும் யாழ். மருத்துவ பீட சமுதாயம் மற்றும் குடும்பநல மருத்துவத்துறையும் இணைந்து நீரழிவு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளை முன்னெடுத்துவருவதாக அவர் குறிப்பிட்டார்.


















