-உதயநகர் பகுதியில் சம்பவம்-
-சப்தசங்கரி, சு.பாஸ்கரன்-
கிளிநொச்சியில் யாழ் ராணி ரயிலுடன் மோதுண்டு முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் கடவையை கடக்க முட்பட்ட முதியவர், அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ் ராணி ரயிலுடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் சம்பவத்தில் கிளிநொச்சி ஆனந்தபுரம் சேர்ந்த சபாபதி என்ற 82 வயதுடைய முதியவரே உயிரிழந்ததாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.


















