இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ள ஆன்மீகத் தலைவரும், எழுத்தாளரும், சமய சொற்பொழிவாளருமான சுவாமி பூஜ கைலாஷானந் கிரி ஜீ மகாராஜ் உள்ளிட்ட குழுவினர் நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணியளவில் பலாலி சர்வதேச விமான நிலையத்தினை வந்தடைந்தார்.
சுவாமி உட்பட குழுவினரை யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் உள்ளிட்ட குழுவினர் சுவாமிகள் தலைமையிலான குழுவினரை வரவேற்றனர்.
ஆன்மீகத் தொடர்புடைய சிவாலயங்கள் மற்றும் நுவரெலியா சீதை அம்மன் கோவிலுக்கு ஆன்மீக விஜயம் மேற்கொள்வதன் மூலம் இலங்கை மற்றும் இந்திய இடையிலான ஆன்மீக மற்றும் கலாசார விஜயங்களை ஊக்குவிக்கும் முகமாக சுவாமியின் விஜயம் அமைந்துள்ளதுடன், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்திற்கும் விஜயம் செய்து தரிசனத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


















