-இ.கலைஅமுதன்-
யாழ்.சோமசுந்தரம் வீதியில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று காலை 6.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் நல்லூரைச் சேர்ந்த விஜயரத்திரனம் மோகன்தாஸ் (வயது42) என்பவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் விபத்தா? தற்கொலையா? என விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

















