2006 ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று காலை சாவகச்சேரியில் இடம்பெற்றது.
இதன் நிறைவில் சாவகச்சேரி நகராட்சி மன்ற முன்னாள் உபநகரபிதா கிஷோரின் ஏற்பாட்டில் மாமனிதர் நினைவாக மரநடுகை இடம்பெற்றது.
மாமனிதர் ரவிராஜ் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் பொழுது அவரின் நிதி ஒதுக்கீட்டில் முதன்முறையாக தூர்வாரி புனரமைக்கப்பட்ட கண்டுவில் குளக்கரையில் குறித்த மரநடுகை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.


















