யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நகரசபைக்கு உட்பட்ட உணவகங்களில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் லஞ்சீற் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகரசபையும், பருத்தித்துறை நகர வர்த்தகர்களும் இன்று இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
பருத்தித்துறை நகரசபைக்கு உட்பட்ட உணவகங்களில் லஞ்சீற் உட்பட பொலித்தீன் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது தொடர்பாக பருத்தித்துறை நகரசபை மண்டபத்தில் பருத்தித்துறை நகரசபை தவிசாளர் வின்சன்டீபோல் டக்ளஸ் போல் தலைமையில் நகர வர்தகர்களுடன் இடம் பெற்ற கூட்டத்திலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து உணவகங்களில் பொலித்தீன் பயன்படுத்துவதில்லையென்றும், அதற்குப் பதிலாக வாழை இலையை பயன்படுத்துவதெனவும், பொலித்தீன் பயன்பாட்டை முற்றுமுழுதாக நிறுத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

















