-வாகனத்தில் இருந்தபடி பார்வையிட்டனர்-
-சொ.வர்ணன்-
யாழ்.வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்படாத பகுதிகளை ஐ.நா பிரதிநிதிகள் மற்றும் கனடா நாட்டு பிரதிநிதிகள் குழு நேற்று நேரில் பார்வையிட்டுள்ளது.
உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றிருந்த மேற்படி குழு அங்குள்ள நிலமைகளை நேரடியாக பார்வையிட்டுள்ளது.
வலி,வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், இந்த விடயம் மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்திருப்பதை ஐ.நா மற்றும் கனடா நாட்டு பிரதிநிதிகள் பார்வையிட்டுள்ளமை ஊடாக அறிய முடிகிறது.


















