நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை வானில் அரிய வகை முழு சந்திர கிரகணம் தென்படவுள்ளது.
இரத்த நிலவு என்று அழைக்கப்படும் இது இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணமாகும். குறித்த முழு சந்திர கிரகணம் 82 நிமிடங்கள் நிகழும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், நிலவு அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 77% மானோருக்கு இந்த சந்திர கிரகணத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கிரகணத்தை ஆசியா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் தௌிவாக அவதானிக்க முடியும்.
இந்த அற்புதமான நிகழ்வு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் முழுமையாகத் தெரியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் தலைவரும், வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளரும், ஆர்தர்.சி.கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவருமான பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.


















