-இந்திய துணைத் தூதுவர்-
காந்தியின் வாழ்க்கை தத்துவங்கள் மற்றம் கோட்பாடுகள் தற்போது உள்ளவர்களுக்கு தேவையான ஒன்றாகவுள்ளதாக யாழ்.இந்திய துணை தூதுவர் சாய் முரளி தெரிவித்தார்.
மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்னால் அமைந்துள்ள காந்தியின் நினைவுத்தூபியடியில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.இதில் துணை தூதுவர் பேசுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
காந்தியின் உண்மை, சத்தியம், அவரின் வாழ்க்கை தத்துவங்கள், கோட்பாடுகள் தற்போது உள்ளவர்களுக்கு தேவையான ஒன்றாக காணப்படுகின்றது. உலகத்தில் வாழும் மக்கள் அவர்களின் வழிகளை பின்பற்றி நேர்மையாக வாழவேண்டும்.
காந்தியடிகள் இறக்கும் வரை சத்தியம், நேர்மை ஆகியவற்றை கடைப்பிடித்து வாழ்ந்ததே அவரை நாங்கள் அனுஷ்டிக்க காரணமாக அமைகின்றது. வாழ்க்கையில் எந்த ஒரு துன்பம் வந்தாலும் சத்தியம், உண்மை ஆகியவற்றை நாங்கள் கைவிடக்கூடாது. இறுதிவரை தர்மமே எம்முடன் கூட வருமென்றார்.


















