-சி.ஜெகதீஸ்வரன்-
பருத்தித்துறை – யாழ்ப்பாணம் வீதியில் கட்டைப்பிராயில் வீதியில் படுத்திருந்தவரை மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கோப்பாய் தெற்கு, கட்டைப்பிராயைச் சேர்ந்த சபாரத்தினம் கெங்காதரன் (வயது-56) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
மதுபோதையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் படுத்திருந்த போது வீதியால் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவரின் மீது ஏறி விபத்திற்குள்ளானது.
இதில் அவர் ஸ்தலத்திலே உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் ஓட்டி படுகாயம் அடைந்தார். இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார் சாட்சிகளை கோப்பாய் பொலிசார் நெறிப்படுத்தினர்.


















