இலங்கை மின்சார சபையின் தன்னிச்சையான மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மின்சார ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
அதிகாரிகள் தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் இந்த வேலைநிறுத்தத்தைத் தீவிரப்படுத்துவோம் என்றும் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளது.


















