-பா.பிரதீபன்-
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.
பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், யாழ்.நகரை அண்மித்த பகுதிகளில் இருவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் 03 கிராம் 130 மில்லிகிராம் மற்றும் 06 கிராம் 510 மில்லிகிராம் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட இருவரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


















